10 நாளில் 200 கோடி... மாபெரும் சாதனை படைத்த விஜய்யின் மாஸ்டர்!

10 நாளில் 200 கோடி... மாபெரும் சாதனை படைத்த விஜய்யின் மாஸ்டர்!

மாஸ்டர்

50 சதவீத இருக்கை அமல்படுத்தப்பட்டதால், காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

 • Share this:
  விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் 200 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது.

  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

  இதன் படபிடிப்பு முடிந்து வெளியாகும் சமயத்தில், கொரோனா பரவல் அதிகமானதால், இதன் வெளியீடு தள்ளிப் போனது. அதோடு திரையரங்குகளும் மூடப்பட்டது. இதையடுத்து நவம்பர் 10-ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்தது.

  ஆனாலும் கொரோனா லக்டவுனுக்குப் பிறகு வெளியான உச்ச நட்சத்திரத்தின் படம் என்ற பெருமையை மாஸ்டர் பெற்றது. 50 சதவீத இருக்கை அமல்படுத்தப்பட்டதால், காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது.

  அந்த வகையில் 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது விஜய்யின் ‘மாஸ்டர்’. இதனை #MasterEnters200CrClub என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். இதற்கு முன்பு விஜய் நடித்த, மெர்சல், சர்கார், பிகில் ஆகிய படங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் 200 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: