Home » News » Entertainment » VIJAY MASTER AUDIO LAUNCH UPDATE MSB

ரசிகர்கள் இல்லாமல் நடைபெறுகிறதா மாஸ்டர் இசை வெளியீட்டு விழா?

ரசிகர்கள் இல்லாமல் நடைபெறுகிறதா மாஸ்டர் இசை வெளியீட்டு விழா?
மாஸ்டர்
  • Share this:
மாஸ்டர் இசைவெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஹ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக நேற்று படக்குழு அறிவித்தது. இதையடுத்து மார்ச் மாதம் முழுக்க மாஸ்டர் படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

ஏப்ரல் 9-ம் தேதி படத்தைத் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அனிருத் இசையில் ஏற்கெனவே குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இரண்டாவது பாடலுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக படத்தில் பணியாற்றும் இசைக்கலைஞர் ட்வீட் செய்துள்ளார்.


இந்நிலையில் மார்ச் 15-ம் தேதி படத்தின் இசைவெளியீட்டு விழாவை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விழாவில் திரைத்துறை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. முன்னதாக பிகில், சர்கார் உள்ளிட்ட படங்களின் இசைவெளியீட்டு விழாக்களில் ரசிகர்கள் பங்கேற்ற நிலையில் மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழா ரசிகர்கள் இல்லாமல் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இசைவெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.



மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமானவரித்துறையினரின் சோதனை, பாஜக நடத்திய போராட்டம் ஆகியவை குறித்து இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாஸ்டர் இசைவெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க: சூர்யாவின் 39-வது பட இயக்குநர் மாற்றம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
First published: March 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading