ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மாஸ்டருக்கு முன்னுரிமை... ஈஸ்வரன் படக்குழுவின் முயற்சி தோல்வி?

மாஸ்டருக்கு முன்னுரிமை... ஈஸ்வரன் படக்குழுவின் முயற்சி தோல்வி?

மாஸ்டர் | ஈஸ்வரன்

மாஸ்டர் | ஈஸ்வரன்

2021-ம் ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படத்தை திரையிடுவதற்கே திரையரங்க உரிமையாளர்கள் அதிக முன்னுரிமை கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஈஸ்வரன் பட குழுவினர் திரையரங்கு உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததற்கு பின்னர் கடந்த மாதம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி வழங்கி இருந்தாலும் திரையரங்குகளில் பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வராததால் பொதுமக்கள் வருகை குறைந்து திரையரங்குகள் மூடியே கிடக்கின்றன.

இந்த நிலையில் வரும் பொங்கலுக்கு விஜய் மட்டும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தை அனைத்து திரையரங்குகளிலும் திரையிட்டு மக்களுடைய வருகையை உறுதி செய்ய வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் விரும்புகின்றனர்.

மாஸ்டர் திரைப்படத்தோடு சிம்பு நடித்திருக்கும் ஈஸ்வரன் திரைப்படத்தையும் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர ஈஸ்வரன் படக்குழுவினர் முடிவு செய்து இதற்கான பேச்சுவார்த்தையை திரையரங்கு உரிமையாளர்களுடன் நடத்தியுள்ளனர். ஆனால் சுமார் 800 திரைகளில் மாஸ்டர் திரைப்படத்தை மட்டும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் உறுதியாக உள்ளதால் ஈஸ்வரன் திரைப்படம் வெறும் 200திரைகளில் மட்டுமே திரையிடப்படுகிறது.

மேலும் படிக்க: இளையராஜாவை நிபந்தனைகளுடன் அனுமதிக்கத் தயார் - பிரசாத் ஸ்டுடியோ

ஒருவேளை ஈஸ்வரன் படம் திரைக்கு வந்த பின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றால் ஒரு வாரத்தில் அந்த திரைப்படத்தை அதிக திரையரங்கில் வெளியிட யேசிக்கலாம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறியுள்ளதால் ஈஸ்வரன் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

First published:

Tags: Eeswaran Movie, Kollywood, Master