விஜய் சூப்பர் நடிகர் அல்ல -மலையாள நடிகர் கருத்துக்கு எதிர்ப்பு!

விஜய்

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆனால் அவர் சூப்பர் நடிகர் இல்லை என்று கூறியுள்ளார் மலையாள நடிகர் சித்திக்.

மலையாள சினிமாவில் தயாரிப்பாளராக இருக்கும் சித்திக், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு சினிமா துறையும் சூப்பர் ஸ்டார்களையே நம்பி இருக்கிறது. மதுர ராஜா, லூசிஃபர் போன்ற படங்களை எடுக்க மம்மூட்டி, மோகன்லால் போன்ற சூப்பர் நடிகர்கள் இருப்பது அவசியம். உண்மையில் இவ்வாறான நடிகர்களை நம்பித்தான் சினிமா துறை இருக்கிறது. என்னைப் போன்ற நடிகர்கள் சூப்பர் ஸ்டார் நடிகர்களால் தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம்.மலையாள திரைத்துறைக்கு மம்மூட்டி, மோகன்லால் என்ற இரண்டு பெரிய நடிகர்கள் இருப்பது அதிர்ஷ்டமே. இருவருமே சூப்பர் ஸ்டார். இருவருமே மிகச்சிறந்த நடிகர்கள். ஆனால் தமிழ்சினிமாவில் நிலைமை வேறு. விஜய் போன்றவர்கள் அங்கு சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அவர் சிறந்த நடிகர் அல்ல. ஆனால் அவரது ஸ்டார் அந்தஸ்துதான் அவர் திரைத்துறையில் உயரக் காரணம். ஆனால் கமல்ஹாசன் சிறந்த நடிகர். அவர் சூப்பர் ஸ்டாரும் கூட” என்று கூறியுள்ளார்.சித்திகின் இந்தக் கருத்துக்கு தனது ஃபேஸ்புக்கில் பதில் தெரிவித்துள்ள நடிகர் ஹரிஷ் பேரடி, “விஜய் ஒரு சூப்பர் ஸ்டார். அதே சமயம் சிறந்த நடிகரும் கூட. மற்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களைப் போல் இல்லாமல், விஜய் மிகவும் அடக்கமானவர். நல்ல மனிதர். இதெல்லாம் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: ஏன் த்ரில்லர் படத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? - அருள்நிதி பதில்

Published by:Sheik Hanifah
First published: