பொங்கலுக்கு பிறகு ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவேன்- விஜய்யின் தந்தை

பொங்கலுக்கு பிறகு ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவேன்- விஜய்யின் தந்தை

எஸ்.ஏ.சந்திரசேகர்

SA Chandrasekar பொங்கலுக்கு பிறகு ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவேன் என விஜயின் தந்தை தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான எஸ்.ஏ.சந்திரசேகர் 70 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் நடிகர் விஜயின் தந்தை என்பது அனைவரும் அறிந்ததே. இவர் 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

  இதையடுத்து சமீபத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்குவதாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இந்த அறிவிப்பு வெளியானதும் நடிகர் விஜய், தனது தந்தை ஆரம்பித்து இருக்கும் கட்சியில் எனது ரசிகர்கள் யாரும் இணைய வேண்டாம். எனக்கும் எனது தந்தையின் கட்சிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. எனது புகைப்படத்தை கட்சி விளம்பரத்திற்காக பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிந்திருந்தார்.

  விஜய் தரப்பிலிருந்து அதற்கு எதிர்ப்பு வந்ததால் அதில் இருந்து பின்வாங்கினார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர் வேறு பெயரில் கட்சி தொடங்க இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், பொங்கல் முடித்து ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவேன் என்று விஜயின் தந்தை எஸ். ஏ.சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.

  ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கமாட்டேன் இன்று அறிவித்த நிலையில், பொங்கல் முடிந்து ஒரு நல்ல செய்தியை வெளியிடுவேன் என்ற எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த அறிவிப்பால் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள், ரசிகர்கள் இடையேயான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: