ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'மாஸ்டருக்கு மட்டும் இல்ல எல்லா படத்துக்காகவும் பேசுனாரு' - விஜய் குறித்து முதல்வர் பேசியதைக் கொண்டாடும் ரசிகர்கள்

'மாஸ்டருக்கு மட்டும் இல்ல எல்லா படத்துக்காகவும் பேசுனாரு' - விஜய் குறித்து முதல்வர் பேசியதைக் கொண்டாடும் ரசிகர்கள்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

மாஸ்டர் படத்திற்கு மட்டும் அல்ல, இனி திரைக்கு வரவிருக்கும் எல்லா படங்களுக்கும் உதவுமாறு நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதாக தமிழக முதல்வர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் 2021-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  தற்போது தியேட்டர்களில் 50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக முதல்வரை சந்தித்து திரையரங்குகளில் நூறு சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் தற்போது இணையத்தில் தமிழக முதல்வர் நடிகர் விஜய் குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு முதல்வரை சந்தித்து பேசும் பொழுது, மாஸ்டர் படத்திற்கு மட்டும் அல்ல,  அனைத்து படமும் ரிலீசாகாமல் உள்ளது. அதற்காக பல கோடி ரூபாய் தயாரிப்பில் செலவு செய்து பெரும் நஷ்டத்தில் உள்ளனர். அதனை பார்த்து உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்ததாக கூறியுள்ளார்.

  இதைத் தொடர்ந்து ட்விட்டரில் SelflessActorVIJAY எனும் ஹேஷ்டேக் வைரலாகி வருகின்றது. அதில் விஜய் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Acor Vijay, Chief Minister Edappadi Palanisamy, Master