Home /News /entertainment /

அஜித்தை வாழ்த்திய பிரபல இயக்குநர்... வம்பிழுத்து வாங்கிக்கட்டிக்கொண்ட விஜய் ரசிகர்!

அஜித்தை வாழ்த்திய பிரபல இயக்குநர்... வம்பிழுத்து வாங்கிக்கட்டிக்கொண்ட விஜய் ரசிகர்!

அஜித்குமார்

அஜித்குமார்

இயக்குநர் சேரன் அஜித்துக்கு வாழ்த்து சொன்னது குறித்து விஜய் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கும் தனக்கே உரிய பாணியில் பதிலளித்துள்ளார் இயக்குநர் சேரன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். 25 ஆண்டுகள், 58 படங்கள் என தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியிருக்கிறார் அஜித்.

நடிகர் அஜித்துக்கு இன்று 49-வது பிறந்தநாள். இவரது பிறந்தநாளுக்கு திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தமிழக துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என்று கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் சேரன் அஜித்துக்கு தெரிவித்த வாழ்த்து பதிவில், “எந்தவித பின்னனியும் இல்லாமல் திரைத்துறையில் நுழைந்து இன்று தனக்கென ஒரு நிலையான இடத்தை தன் உழைப்பால் பெற்றிருக்கும் நல்ல மனம் கொண்டவரான அஜித் அவர்களுக்கு மனப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” என்று கூறினார்.



இந்தப் பதிவைப் பார்த்த விஜய் ரசிகர் ஒருவர், அப்படியா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த இயக்குநர் சேரன், “விஜய் சார் பிறந்தநாளுக்கும் வாழ்த்து சொல்வேன். கவலை வேண்டாம் சகோதரா” என்று கூறியுள்ளார்.

தன்னம்பிக்கையின் ‘தல’ அஜித் - ஸ்பெஷல் வீடியோ



வீடியோ பார்க்க: வசூல் நாயகன் விஜய்-யின் வெற்றி ரகசியம்!

Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor Ajith, Director cheran

அடுத்த செய்தி