விஜய் மக்கள் மன்ற முன்னாள் தலைவர் புகைப்படம் மீது காறித்துப்பும் போராட்டம் - விஜய் ரசிகர்கள் ஆவேசம்

Youtube Video

விஜய் மக்கள் மன்ற முன்னாள் தலைவர் புகைப்படம் மீது காறித்துப்பும் போராட்டத்தை விஜய் ரசிகர்கள் நடத்தினார்கள்.

  • Share this:
    நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த படம் மாஸ்டர். இதுபோன்று வெளிவரும் விஜயின் ஹிட் திரைப்படங்களின் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதில் மோசடி நடந்திருப்பதாகவும், 100 ரூபாய் டிக்கெட்டுகளை 1,000 ரூபாய்க்கு விற்பதாகவும்,நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு கடந்த மாதம் பிரத்யேக பேட்டி அளித்திருந்தார்.

    இந்நிலையில் தான் நடிகர் விஐய் மக்கள் மன்றத்தின் தற்போதைய தலைவரான புஸ்சி ஆனந்த் மீது, முன்னாள் தலைவர் ஜெயசீலன் இதே மோசடி புகாரை தெரிவித்துள்ளார். அத்துடன் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு விஜய் மக்கள் மன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் பதவிகளை கொடுப்பதாகவும் கடுமையாகச் சாடியிருந்தார்.

    இதனால் கோபமடைந்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர், ஜெயசீலனை செலபோன் மூலமாக தொடர்பு கொண்டு கண்டித்துள்ளனர். விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்த ராமநாதபுரம் நிர்வாகி, ஜெயசீலனுடன் பேசிய ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    ராமநாதபுரம் மக்கள் மன்ற நிர்வாகியை ஜெயசீலன் ஆபாசமாக திட்டியதால், அவரது புகைப்படத்தின் மீது காறித்துப்பும் போராட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்

    ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகியை ஜெயசீலன் திட்டியதற்காக தென்மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்பட்டு கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது; மேலும் ஜெயசீலன் மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவான புஸ்சி ஆனந்த், நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தைக் கைப்பற்றி கமர்ஷியலாக மாற்றி விட்டதாக நடிகர் விஜயி்ன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டியிருந்தார். அதே குற்றச்சாட்டை முன்னாள் நிர்வாகி ஒருவர் கூறியதற்காக போராட்டத்தில் குதித்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: