• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Actor Vijay Fans: மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்..

Actor Vijay Fans: மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்..

விஜய் மக்கள் இயக்கத்தினர்

விஜய் மக்கள் இயக்கத்தினர்

விருதுநகர் அரசு மாவட்ட தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது.

  • Share this:
    நடிகர்களின் ரசிகர்கள் கொடி கட்டுவது, கோஷம் போடுவது தாண்டி சிலநேரம் பென்சில், நோட்புக் என சின்னச் சின்ன நற்பணிகள் செய்வதுண்டு.

    இந்த கொரோனா பேரிடர் காலத்தில் விஜய், சூர்யா, ரஜினி, அருண் விஜய் என பலரது ரசிகர்கள் நற்பணிகள் பல செய்தனர். ஷகிலா, வரலட்சுமி உள்ளிட்ட நட்சத்திரங்கள் தெருவில் இறங்கி உணவுப்பொட்டலங்கள் வழங்கினர். ஆனால், ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை மருத்துவமனைக்கு இலவசமாக தருவது சாதாரண விஷயமில்லை. இதனை விருதுநகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்திருக்கிறார்கள்.

    கொரோனா இரண்டாம் அலையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக இருந்தது. அரசு கார்களை ஆம்புலன்ஸ் வாகனமாக மாற்றி நிலைமையை சமாளித்தது.

    Also Read: கெத்தா போட்டோ வெளியிட்ட நடிகை சினேகா; பயந்து நடுங்கிய வீடியோவை வெளியிட்ட பிரசன்னா!

    Producer Kalaipuli S Thanu wishes Thalapathy Vijay

    அரசின் 108 இலவச ஆம்புலன்சின் சேவை எத்தனை மகத்தானது என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். இதனை கருத்தில் கொண்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆம்புலன்ஸ் ஒன்றை அரசு மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: