‘இது தளபதி ரசிகன் இல்லம் அதிமுகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம்’ என்ற போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு மத்தியில் தேர்தல் பிரசாரங்களும் சூடு பிடித்து வருகின்றன. ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களை நோக்கி நேரடியாக சென்று வாக்குறுதிகளைச் சொல்லி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சர்கார் பட விவகாரத்தின் போது அதிமுகவினர் மேற்கொண்ட போராட்டங்களை முன்வைத்து, அதிமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் விருதுநகர் மாவட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிரணித் தலைவி ஜெகதீஸ்வரி.
இதுகுறித்து வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் ஜெகதீஸ்வரி, சர்கார் பட ரிலீஸ் சமயத்தில் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள்.
நாங்கள் சொந்த செலவில் வைத்திருந்த பேனர்களை கிழித்தார்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமால் எங்களை கண்ணீர் விட வைத்தார்கள். அச்சம்பவம் ஒவ்வொரு ரசிகர்களின் மனதிலும் மறையவில்லை. இதற்காகத்தான் எங்களிடம் ஓட்டுக் கேட்டு வரவேண்டாம் என்று நோட்டீஸ் அடித்து வலைதளங்களில் பதிவிட்டேன்.
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் யாரும் எங்களை இப்படி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. அதிமுகவினர் செய்த போராட்டத்தால் விஜய் ரசிகர்களுக்கு அக்கட்சி மீது வெறுப்பு வந்துவிட்டது. இப்போதுதான் எங்களது எதிர்ப்பை பதிவு செய்ய முடியும்” என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற போஸ்டர்களை சமூகவலைதளங்களிலும் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
ரசிகர்கள் இவ்வாறு முடிவெடுத்தாலும், நடிகர் விஜய் தன்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை அறிவிக்கவில்லை.
வீடியோ: கமல்ஹாசன் உடன் சிறப்பு நேர்காணல்
சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.