ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

"தோனி பிரதமர், விஜய் முதல்வர்’ - மதுரை ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

"தோனி பிரதமர், விஜய் முதல்வர்’ - மதுரை ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

விஜய், தோனி போஸ்டர்

விஜய், தோனி போஸ்டர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் சந்தித்த புகைப்படங்களை வைத்து, ஆளப்போகும் மன்னர்கள் என்ற பெயரில் மதுரை விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் "பீஸ்ட்" என்ற படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்க, நாயகியாக பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

பீஸ்ட் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தின் அருகே, ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. அந்த விளம்பர படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்நாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நடித்துள்ளார். இரண்டு படப்பிடிப்புகளும் அருகருகே நடைபெற்றதால், பீஸ்ட் படத்தின் தளத்திற்கு தோனி வந்து நடிகர் விஜயை சந்தித்தார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வைரலாகும் புகைப்படங்களை மேலும் வைராலக்கும் உத்தி தெரிந்தவர்கள் மதுரை ரசிகர்கள். அந்த வகையில், தோனி - விஜய் புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்திற்குள் மதுரை வடக்கு மாவட்ட மாநகர் இளைஞரணி ரசிகர்கள் ஒட்டியுள்ள அதிரடி போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதில், தோனி - விஜய் அருகருகே இருக்கும் படத்தை வைத்து, தோனி படத்தின் அருகே "PM" என்றும், விஜய் படத்தின் அருகே "CM" என்றும், "ஆளப்போகும் மன்னர்கள்" எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜயை அரசியலுக்கு இழுக்கும் நோக்கில் மதுரை ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமீபத்தில், அவரது பிறந்தநாளுக்கு அவரை வருங்கால முதலமைச்சர் போல கற்பிதம் செய்து ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் வைரலாகின. அதனைத், தொடர்ந்து இப்போது தோனியுடன் இணைத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரும் வைரலாக துவங்கியுள்ளது.

Published by:Karthick S
First published:

Tags: Actor Vijay, MS Dhoni