ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரிலீசுக்கு முன்பே தமிழ்ராக்கர்ஸில் வெளியான விஜய் தேவரகொண்டா படம்

ரிலீசுக்கு முன்பே தமிழ்ராக்கர்ஸில் வெளியான விஜய் தேவரகொண்டா படம்

டேக்ஸிவாலா பட போஸ்டர்

டேக்ஸிவாலா பட போஸ்டர்

விஜய் தேவரகொண்டா நடித்த டேக்ஸிவாலா படம் திரைக்கு வருவதற்கு முன்னதாகவே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் தேவரகொண்டா நடித்த டேக்ஸிவாலா படம் திரைக்கு வருவதற்கு முன்னதாகவே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

  தமிழ்த் திரையுலகில் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பிரச்னையாக இருப்பது படம் வெளியான அன்றே இணையதளங்களில் வெளியாவதுதான். அப்படி சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தை வெளியான முதல் நாளன்றே ஹெச்.டி பிரிண்டில் இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் இயங்கும் ட்விட்டரில் அறிவித்திருந்தது. அதைப் போலவே படம் வெளியான முதல் நாளன்றே முழு படத்தையும் இணையத்தில் வெளியிட்டது. சர்கார் படத்தைப் போன்றே ரஜினி நடிப்பில் சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் 2.0 படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் இயங்கும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  Actor Vijay | Sarkar poster
  நடிகர் விஜய்

  இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து தமிழ் ராக்கர்ஸ் இதுகுறித்து விளக்கமளித்திருந்தது. அதில், “ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நாங்கள் இல்லை. எங்களுக்கு அங்கு கணக்குகள் கிடையாது. சமூக வலைதளங்களில் எங்களின் பெயரைப் பயன்படுத்தி யாராவது பதிவிட்டால், அவை போலியானவை. அதுபோன்ற ஐ.டி.க்களையும், அவர்கள் பரப்பும் வதந்திகளையும் நம்பாதீர்கள் ” என்று கூறப்பட்டுள்ளது.

  2.0 பட போஸ்டர், 2.0 poster,
  2.0 திரைப்படத்தின் போஸ்டர்

  தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கும் டேக்ஸிவாலா படத்தை திரைக்கு வருவதற்கு முன்னதாகவே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

  இதனால் படக்குழுவினர் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். இந்தப் படம் நவம்பர் 17-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  கோலிவுட்டில் என்ன நடக்கிறது? தெரிஞ்சுக்க கிளிக் செய்க

  News18 Tamil Appசெய்திகளை நியூஸ்18 தமிழ் ஆப் வழியாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

  வீடியோ பார்க்க: இத்தாலியில் மணவாழ்வில் இணையும் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Tamil rockers, Vijay devarakonda