• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மீண்டும் அதே கோபக்கார இளைஞனாக விஜய் தேவரகொண்டா- ’வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ டீசர்!

மீண்டும் அதே கோபக்கார இளைஞனாக விஜய் தேவரகொண்டா- ’வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ டீசர்!

World Famous Lover Teaser: இத்திரைப்படம் வருகிற பிப்ரவர் 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் ’வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ திரைப்பட டீசர் வெளியாகி உள்ளது.

    க்ரந்தி மாதவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரேசா, இசபெல் லெய்ட், ராஷி கண்ணா ஆகிய நான்கு பேர் நாயகிகளாக நடித்துள்ளனர். நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் மீண்டும் கோபக்கார இளைஞனாகவே தோன்றியுள்ளார் விஜய் தேவரகொண்டா.

    இத்திரைப்படம் வருகிற பிப்ரவர் 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது. கே.ஏ.வல்லபா தயாரிப்பில் கோபி சுந்தர் இசையில் ஜெயகிருஷ்ணா ஒளிப்பதிவில் இப்படம் தயாராகி உள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா அடுத்ததாக ஃபைட்டர், ஹீரோ மற்றும் பெயர் வெளியிடப்படாத மற்றொரு படம் என மூன்று திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.



    மேலும் பார்க்க: புத்தாண்டு திரைப்படமாக ஹாங்காங்-ல் வெளியாகி உள்ள ‘மிஷன் மங்கள்’..!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: