ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லைகர் படுதோல்வியால் கோபம்.. இயக்குநரின் போனைக் கூட எடுக்காமல் கடுப்பு காட்டும் விஜய் தேவரகொண்டா!?

லைகர் படுதோல்வியால் கோபம்.. இயக்குநரின் போனைக் கூட எடுக்காமல் கடுப்பு காட்டும் விஜய் தேவரகொண்டா!?

விஜய் தேவரகொண்டா-இயக்குநர் பூரி ஜெகன்நாத்

விஜய் தேவரகொண்டா-இயக்குநர் பூரி ஜெகன்நாத்

லைகர் இயக்குநரை முடிந்தவரை விஜய் தேவரகொண்டா ஒதுக்கி வருவதாக கிசுகிசுக்கிறது டோலிவுட்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  லைகர் படத்தின் தோல்வியை தொடர்ந்து இயக்குநர் பூரி ஜெகன்நாத் உடன் விஜய் தேவரகொண்டா அடுத்ததாக இணைய உள்ள ஜனகனமன திரைப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது

  விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், சிறப்பு தோற்றத்தில் மைக் டைசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான லைகர் திரைப்படம் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியானது.

  இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர், பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர் உள்ளிட்டோர் இணைந்து லைகர் படத்தை தயாரித்து இருந்தனர். இந்தப்படத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரராக விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார்.

  மிக மோசமான திரைக்கதை காரணமாக இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. அதிக பட்சமாக 125 கோடி ரூபாய் செலவில் இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் படம் சுமார் 55 கோடி அளவுக்கு மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இது ஒரு பக்கம் இருந்தாலும், லைகர் படத்தை சினிமா ரசிகர்கள் மிகக் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். இது ஏற்கனவே தோல்வியால் மன வருத்தத்தில் இருந்த படக்குழுவுக்கு மேலும் காயத்தை அளித்தது.

  இந்த நிலையில் நடிகர் விஜய் தேவர்க்கொண்டாவும்  பட இயக்குனரும் பேசிக்கொள்வதுகூட இல்லையாம். இயக்குநரை முடிந்தவரை விஜய் தேவரகொண்டா ஒதுக்கி வருவதாக கிசுகிசுக்கிறது டோலிவுட்.
   
  View this post on Instagram

   

  A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)  லிகர் படத்திற்கான முழு சம்பளத்தையும் விஜய் தேவரகொண்டா வாங்கவில்லையாம், படம் வெளியான பிறகு விஜய் தனது சம்பளத்தில் ஒரு பகுதியைப் வாங்கிக்கொள்வதாக கூறி இருந்த நிலையில் தற்போது நிலைமையே மாறிவிட்டதாக கூறப்படுகிறது.

  லைகர் படத்தை தமிழ்நாட்டில் ஆர்.கே. சுரேஷ் வெளியிட்டுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான லைகர் திரைப்படம் பெரும்பாலான ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது.

  பாலிவுட்டில் நடிகர் வைத்து ஜனகனமனாவை ஹிந்தி மற்றும் தெலுங்கில் உருவாக்க பூரி இப்போது விரும்புகிறார். லைகருக்குப் பிறகு, மும்பையில் உள்ள முன்னணி நடிகர்கள் யாரையாவது அவருடன்  படம்  எடுக்க யார் வருவார்கள் என்று  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

  Read More: பட வாய்ப்புக்காக கிளாமரா? இன்ஸ்டா கவர்ச்சி போட்டோக்கள் குறித்து பேசிய சாக்‌ஷி!

  பலவீனமான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள், படத்தின் மீதான ஆர்வத்தை குறைத்தது ரசிகர்கள் தெரிவித்தனர் .

  Published by:Srilekha A
  First published:

  Tags: Cinema, Vijay devarakonda