ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தில் இணைந்த பிரேசில் அழகி!

news18
Updated: October 12, 2018, 10:44 PM IST
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தில் இணைந்த பிரேசில் அழகி!
நடிகை இஸபெல் லெய்ட்
news18
Updated: October 12, 2018, 10:44 PM IST
விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் ஆகிய படங்களின் வெற்றியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் நடித்த நோட்டா திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து தற்போது மல்லி மல்லி இதி தானி ரோஜு படம் வாயிலாக கவனம் ஈர்த்த இயக்குநர் க்ரந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார். கே.எஸ். ராமா ராவ் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

கீதா கோவிந்தம் படத்தின் இசையமைப்பாளர் கோபி சுந்தரே இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கும் நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இதில் நடிக்கிறார். இதன் மூலம் முதன்முறையாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

தற்போது வரை இரண்டு கதாநாயகிகள் நடிக்கவிருக்கும் இந்தப் படத்தில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் இஸபெல் லெயிட்டும் நடிக்க உள்ளார். இவர் இதற்கு முன்னதாக அமிர்கான் நடித்த தலாஷ்: தி ஆன்ஸர் லைஸ் வித்தின், சிக்ஸ்டீன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பானது அக்டோபர் 18-ம் தேதி தசரா பண்டிகையையொட்டி துவங்கவுள்ளது.
First published: October 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்