நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 'லிகர்' திரைப்பட வெளியீடு தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 'லிகர்' திரைப்பட வெளியீடு தேதி அறிவிப்பு!

விஜய் தேவரக்கொண்டா

தெலுங்கின் முன்னணி இயக்குனரான பூரி ஜகந்நாத்தின் இயக்கத்தில் உருவான 'லிகர்' என்ற திரைப்படத்தில் விஜய்தேவரகொண்டா நடித்துள்ளார்.

  • Share this:
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்து வருபவர் விஜய்தேவரகொண்டா. ‘பெல்லி சூப்லு’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக மாறிய இவர், ‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். ‘அர்ஜூன்ரெட்டி’  படம் அடைந்த வெற்றியால், இத்திரைப்படம் தமிழ், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ‘கீதா கோவிந்தம்’ படம் விஜய் தேவரகொண்டாவிற்கு ஏராளமான பெண் ரசிகைகளை பெற்று தந்தது. பின்னர் தமிழில் நோட்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

இந்த நிலையில் தெலுங்கின் முன்னணி இயக்குனரான பூரி ஜகந்நாத்தின் இயக்கத்தில் உருவான 'லிகர்' என்ற திரைப்படத்தில் விஜய்தேவரகொண்டா நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் குத்துசண்டை வீரராக நடிகர் விஜய்தேவரகொண்டா நடித்துள்ள நிலையில் விளையாட்டையும், காதலையும் மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதால், படத்தில் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. 

இந்த சூழலில் இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் வெளியிட்ட டிவீட்டில், “உலகம் முழுவதும் ஒரு பஞ்சைக் காட்டுவதற்கு எல்லாம் தயாராக உள்ளது! லிகர் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் உலகளவில் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் & மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது என . # Liger9thSept #SaalaCrossbreed ஆகிய ஹேஷ்டேக்குகளில் குறிப்பிட்டுட்டுள்ளார். 

இயக்குனர் ஜகந்நாத் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் மகேஷ் பாபு ஆகியயோரை வைத்து படம் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் விஜய் தேவரகொண்டா மற்றும் ஜகந்நாத் இணையும் முதல் திரைப்படம் என்பதால் இந்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் லிகர் திரைப்படத்தில் போஸ்ட்டரை வெளியிட்டிருந்தனர். அதில் ஒரு குத்துச்சண்டை வீரர் கெட்டப்பில் விஜய் தேவரகொண்டா காட்சியளித்தார். அதே நேரத்தில் ஒரு சிங்கம் மற்றும் புலியின் முகங்கள் பின்னணியில் அட்டகாசமாக காட்சியளித்தது. 

இந்த படம் கொரோனா பரவலுக்கு முன்னரே திட்டமிட்ட நிலையில் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா, டாக்சி வாலா, டியர் காம்ரேட் ஆகிய படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் லிகர் திரைப்படத்திற்காக விஜய் தேவரகொண்டா கடுமையாக உழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published by:Ram Sankar
First published: