Home /News /entertainment /

நடிகர் சூர்யா, விஜய் இணைந்து நடிக்கவுள்ள புதிய படம்!

நடிகர் சூர்யா, விஜய் இணைந்து நடிக்கவுள்ள புதிய படம்!

நடிகர் சூர்யா| இயக்குநர் சுதா கோங்கரா

நடிகர் சூர்யா| இயக்குநர் சுதா கோங்கரா

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் சூர்யாவுடன், விஜய் தேவரகொண்டா இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் என் ஜி கே படத்தில் நடித்து வருகிறார். அதோடு இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கும் சூர்யா 37 படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் பாலிவுட் நடிகர் பொமன் இரானி, சமுத்திரக்கனி, சாயிஷா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். சூர்யாவின் இந்த இரண்டு படங்களும் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றன.

    இந்த இரண்டு படங்களை அடுத்து இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கோங்கராவின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை 2019-ம் ஆண்டில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து விஜய் தேவரகொண்டா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை நாயகர்களின் கதையான இத்திரைப்படத்தில் மற்றொரு நாயகனாக விஜய் தேவரகொண்டா நேரடி தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விஜய் தேவரகொண்டா தற்போது நோட்டா திரைப்பட வெளியீட்டில் பிஸியாக இருக்கிறார். நடிகர் சூர்யா, விஜய் தேவரகொண்டா இருவரும் தங்களது படங்களில் பிஸியாக இருப்பதால் அடுத்த சில மாதங்களில் இருவரும் இணைந்து நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம்.

    இயக்குநர் சுதா கோங்கரா இயக்க இருக்கும் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Surya, Vijay devarakonda

    அடுத்த செய்தி