தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரக்கொண்டா. இவருக்கு தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் ரசிகர் கூட்டம் அதிகம் என்று தான் கூற வேண்டும்.குறிப்பாக பெண் ரசிகர்களை அடித்துக்கொள்ள முடியாது. இதையடுத்து விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் வெளிவந்த டியர் காம்ரேட், வேல்ட் ஃபேமஸ் லவ்வர் ஆகிய இரண்டு படங்களுமே தமிழிலும் வெளியானது.ஆனால் அர்ஜுன் ரெட்டி படம் அளவிற்கு வெற்றி பெறவில்லை என கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் விஜய் தேவரக்கொண்டா நடிக்கவிருக்கும் லிகர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிவுள்ளது.இந்த படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கவுள்ளார்.இந்த படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்க உள்ளார்கள்.மேலும் இந்த படத்தை ஹிந்தி இயக்குனரான கரண் ஜோஹரின் தர்மா புரோடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக நடிகை சார்மி பணியாற்ற உள்ளார்.
இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளார். விஜய் தேவரக்கொண்டா பாக்சராக நடிக்கும் இந்த படத்தின் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு பற்றி விஜய் தேவரக்கொண்டா டுவிட்டரில்‘என்னை போல் பின்னணி உள்ள ஒருவர், இங்குள்ள சில விதிமுறைகளின்படி எந்த விதத்திலும் சென்றிருக்க வாய்ப்பில்லை.ஆனால் கடின உழைப்பு, ஆர்வம் ஆகியவற்றால் இங்கே இருக்கிறோம். என்னை போல் இருக்கும் அனைவரும் பெரிதாக கனவு காணுங்கள், நம்புங்கள் அதை நடத்தி காட்டுங்கள்’ என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் விஜய் தேவரக்கொண்டாவின் லிகர் படத்தின் போஸ்டருக்கு ரசிகர்கள் பீரில் அபிஷேகம் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை நடிகை சார்மி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.