Home /News /entertainment /

வெளிநாட்டில் ஓய்வு... அட்லிக்கு மீண்டும் வாய்ப்பு.. விஜய்-ன் நெக்ஸ்ட் மூவ்?

வெளிநாட்டில் ஓய்வு... அட்லிக்கு மீண்டும் வாய்ப்பு.. விஜய்-ன் நெக்ஸ்ட் மூவ்?

இயக்குநர் அட்லி | நடிகர் விஜய்

இயக்குநர் அட்லி | நடிகர் விஜய்

சர்கார் படத்தை அடுத்து நடிகர் விஜய் நடிக்க இருக்கும் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
சர்கார் படத்தை அடுத்து, நடிகர் விஜய் நடிக்க இருக்கும் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

கத்தி , துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் - நடிகர் விஜய் கூட்டணியில் சர்கார் உருவாகியுள்ளது. இவர்களின் கூட்டணியில் உருவான கத்தி, துப்பாக்கி ஆகிய 2 படங்களுமே மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ள நிலையில் சர்கார் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதேபோல் படம் தொடர்பான சர்ச்சைகளும் தலைதூக்கியுள்ளன. முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும், படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்திருக்கிறது. படத்தை முழுவதுமாக நடித்து முடித்திருக்கும் நடிகர் விஜய் படத்தின் ரிலீசுக்குப் பின்னர் ஓய்வுக்காக ஒரு சில வாரங்கள் வெளிநாடு செல்ல உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதே போல் தனது அடுத்த படத்தில் நடிகர் விஜய் கவனம் செலுத்தி வருவதாகவும், அந்தப் படத்தை இயக்குநர் அட்லி இயக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் அட்லி இயக்க இருக்கும் இந்தப் படத்துக்கு ஆளப்போறான் தமிழன் என்று பெயர் வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சர்கார் படத்தின் ரிலீசுக்குப் பின்னர் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also See:
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor vijay, Director Atlee, Sarkar

அடுத்த செய்தி