பட வேலைகளை நிறுத்தச் சொன்ன விஜய்... காரணம் என்ன?

நடிகர் விஜய்

கொரோனா இரண்டாவது அலை சென்னையில் உக்கிரமடைந்திருக்கும் நிலையில், அரங்கு அமைக்கும் பணியை நிறுத்த சொல்லியிருக்கிறார் விஜய்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது நடைபெறும் விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு வேலைகளை விஜய் நிறுத்தச் சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது நடிக்கிறார். விஜய்யின் 65 வது படம் என்பதால், விஜய் 65 என இப்படம் தற்காலிகமாக குறிப்பிடப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் ஆரம்பத்தில் ஜார்ஜியாவில் தொடங்கியது.

முதல்கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டனர். அதற்காக பெரிய ஷாப்பிங் மால் அரங்கு அமைக்கும் பணி சென்னையில் தொடங்கியது

Also read... இந்தியன் 2 படத்தின் தாமதத்துக்கு தயாரிப்பு நிறுவனமான லைகா தான் காரணம் - இயக்குனர் ஷங்கர்!

கொரோனா இரண்டாவது அலை சென்னையில் உக்கிரமடைந்திருக்கும் நிலையில், அரங்கு அமைக்கும் பணியை நிறுத்த சொல்லியிருக்கிறார் விஜய். பட வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், 'விதியை மீறி ஊரடங்கில் விஜய் படத்திற்கு அரங்கம் அமைக்கும் பணி, தொழிலாளர்களுக்கு கொரோனா' என விஜய்யை சம்பந்தப்படுத்தியே செய்தி வெளியாகும். வம்பு எதற்கு என்று பட வேலைகளை நிறுத்தும்படி கூறியுள்ளார் விஜய். இதனால், சென்னையில் திட்டமிட்ட இரண்டாம்கட்ட படப்பிடிப்பு மேலும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

விஜய் நடிக்கும் இந்த ஆக்ஷன் படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக நடிக்க செல்வராகவனிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக ஒரு தகவல் உள்ளது. சாணிக்காகிதம் படத்தில் செல்வராகவன் முதல்முறையாக நடித்துள்ளார். அதில் அவரது தோற்றத்தைப் பார்த்தே, அவரை விஜய்க்கு வில்லனாக்கினால் என்ன என்று யோசித்திருக்கிறார்கள். ஆனால், எதுவும் இன்னும் முடிவாகவில்லைஅனிருத் படத்துக்கு இசையமைக்கிறார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: