சர்கார்-க்கு போட்டியாக தீபாவளிக்கு வரும் ராஜமௌலி உதவியாளரின் படம்

தீபாவளிக்கு ‘சர்கார்’படத்துடன் விஜய் ஆண்டனியின் ‘திமிரு பிடிச்சவன்’ என்ற படமும் வெளியாகிறது. இந்தப் படத்தை இயக்குநர் ராஜ மௌலியிடம் உதவியாளராகப் பணியாற்றிய கணேஷா இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஸ்ரீகாந்த், சுனைனா நடிப்பில் வெளியான நம்பியார் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் போலீஸாக நடித்துள்ளனர்.

சர்கார்-க்கு போட்டியாக தீபாவளிக்கு வரும் ராஜமௌலி உதவியாளரின் படம்
நிவேதா பெத்துராஜ் | விஜய்
  • News18
  • Last Updated: October 9, 2018, 3:10 PM IST
  • Share this:
தீபாவளிக்கு ‘சர்கார்’படத்துடன் விஜய் ஆண்டனியின் ‘திமிரு பிடிச்சவன்’ என்ற படமும் வெளியாகிறது.

நடிகர் விஜய் - இயக்குநர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டை சமீபத்தில் நடத்தி முடித்த படக்குழு, தீபாவளிக்கு படம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.

முன்னதாக சூர்யா- செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் என்.ஜி.கே படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டணி நடித்துள்ள திமிரு பிடிச்சவன் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ராஜமௌலியிடம் உதவியாளராகப் பணியாற்றிய கணேஷா இயக்கியுள்ளார்.

இவர் இதற்கு முன்னதாக ஸ்ரீகாந்த், சுனைனா நடிப்பில் வெளியான நம்பியார் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் போலீஸாக நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் படத்தை தயாரித்துள்ளது. தற்போது தீபாவளி ரேஸில் சர்கார், திமிரு பிடிச்சவன், பில்லா பாண்டி ஆகிய படங்கள் உள்ளன.
First published: October 9, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading