ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கொலைகாரன் ரிலீஸ் தேதியை வித்தியாசமாக அறிவித்த படக்குழு

கொலைகாரன் ரிலீஸ் தேதியை வித்தியாசமாக அறிவித்த படக்குழு

கொலைகாரன்

கொலைகாரன்

ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதையாக கொலைகாரன் படம் உருவாகியுள்ளது

  • News18
  • 1 minute read
  • Last Updated :

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கொலைகாரன் படத்தின் ரிலீஸ் தேதியை வித்தியாசமாக அறிவித்துள்ளது படக்குழு.

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், விஜய் ஆண்டனி, ஆஷிமா நார்வால் ஆகியோர் நடித்துள்ள படம் கொலைகாரன். ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அர்ஜூன் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். ஒருதலை பட்சமாக காதலிக்கும் தனது காதலிக்காக பல கொலைகளை செய்யும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்து உள்ளார். அந்த கொலைக்கான காரணம் என்ன விஜய் ஆண்டனிக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்பதை கண்டறியும் போலீஸ் அதிகாரியாக அர்ஜூன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வித்தியாசமாக அறிவித்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில் முதலில் ரீலிஸ் தேதி 17-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. பிறகு பல தேதிகள் அறிவிக்கப்படும். இறுதியாக ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also watch

First published:

Tags: Actor Arjun, Vijay Antony