மாஸ்டர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

மாஸ்டர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

மாஸ்டர்

மாஸ்டர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூலித்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வந்திருக்கிறது.

சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருக்கும் மாணவர்களை தன்னுடைய ஆதாயத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தும் விஜய் சேதுபதியை ஒரு கல்லூரி பேராசிரியரான விஜய் ரெய்டு விடுவதுதான் மாஸ்டர் படத்தின் மையக்கரு. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் சரியான பொங்கல் விருந்தாக மாஸ்டர் அமைந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தியேட்டரில் 50% இருக்கைகளுக்கு அனுமதி என்ற நிலையில் வசூல் ரீதியாகவும் மாஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் ரூ.23 கோடி வசூல் செய்திருப்பதாகவும், கர்நாடகா மற்றும் கேரளாவில் முதல் நாளான நேற்று ரூ.6 கோடியும், மொத்தமாக ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா அச்சுறுத்தலால் 6 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் அதிகமாக மக்கள் கூட்டம் வரவில்லை.

மேலும் படிக்க: ஓவியாவின் காதல் பதிவு? லவ்வர் இவர் தானா?

இந்நிலையில் பொங்கலுக்கு வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் மீண்டும் மக்களை திரையரங்கு நோக்கி திரும்ப வைத்திருப்பது திரைத்துறையினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: