எப்படி எங்களோட சர்ப்ரைஸ்... மாஸ்டர் புதிய போஸ்டர் ரிலீஸ்

எப்படி எங்களோட சர்ப்ரைஸ்... மாஸ்டர் புதிய போஸ்டர் ரிலீஸ்

மாஸ்டர் பட ஸ்டில்

மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது.

இதனிடையே அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. அதேபோல் வசனமே இல்லாமல் வெளியான டீசரும் ட்ரெய்லர் குறித்த எதிர்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்த படக்குழு தியேட்டர்களில் 100% இருக்கைகளை நிரப்பிக் கொள்ள தமிழக அரசிடம் அனுமதி கோரியது.

அதேவேளையில் மத்திய அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால் தமிழக அரசு தன்னுடைய அறிவிப்பை வாபஸ் பெற்று 50% இருக்கைகளுக்கு அனுமதி என்ற பழைய நிலையே தொடரும் என்று அறிவித்தது.

இந்நிலையில் நாள்தோறும் ஒவ்வொரு ப்ரமோ வீடியோக்களை வெளியிட்டு மும்முரமாக விளம்பரம் செய்து வரும் படக்குழு இன்று விஜய் - விஜய் சேதுபதி மோதும் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளது. முன்னறிவிப்பில்லாமல் வெளியான இந்த போஸ்டரைக் குறிப்பிட்டு எங்களது சர்ப்ரைஸ் எப்படி இருக்கிறது என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது படக்குழு.



இந்த ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் வெளியாகும் பெரிய படங்கள் என்பதால் தியேட்டர் உரிமையாளர்களும் ரசிகர்களைப் போல் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: