விஜய், சூர்யா ரசிகர்கள் திடீர் மோதல் - ட்ரெண்ட் மாறியதா?

விஜய், சூர்யா ரசிகர்கள் திடீர் மோதல் - ட்ரெண்ட் மாறியதா?

விஜய் | சூர்யா

சமூகவலைதளத்தில் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் திடீர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

  • Share this:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்கள் குறித்த செய்தி, புதிய பட அறிவிப்பு, ட்ரெய்லர் உள்ளிட்டவை வெளியாகும் போது போது அதை ட்ரெண்டாக்கி கொண்டாடித் தீர்ப்பார்கள்.

2020-ம் ஆண்டு விரைவில் விடை பெற இருக்கும் நிலையில் இந்த ஆண்டில் ட்விட்டரில் அதிகம் ட்ரெண்டான ஹேஷ்டேக், ரீ-ட்வீட் ஆன புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை ட்விட்டர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதில் 2020-ம் ஆண்டில் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட பதிவாக விஜய்யின் நெய்வேலி செல்ஃபி புகைப்படம் அமைந்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் #VIJAYRuledTwitter2020 என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங்கில் இடம்பெறச் செய்தனர் விஜய்யின் தீவிர ரசிகர்கள்.

மேலும் படிக்க: Pa Ranjith | அடுத்த படத்தின் டைட்டிலை வெளியிட்டார் இயக்குநர் பா.ரஞ்சித்

2020-ம் ஆண்டு ட்ரெண்டிங்கில் சூரரைப்போற்று ஹேஷ்டேக் இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பதை அறிந்த சூர்யாவின் ரசிகர்கள் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக #SURIYARuledTwitter2020' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இருதரப்பு ரசிகர்களிடையேயும் காரசார மோதலும் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க: பேச்சுலர் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் ஜி.வி.பிரகாஷ்

ட்விட்டரில் பெரும்பாலான நேரங்களில் விஜய் - அஜித் ரசிகர்களுக்கிடையே தான் அதிகம் போர் நடக்கும். அதை வேண்டாம் என்று விஜய்- அஜித் இருவரும் சொன்னபோதே ரசிகர்கள் காதுகொடுத்து கேட்டபாடில்லை. தற்போது விஜய் - சூர்யா ரசிகர்கள் ட்விட்டர் போரில் ஈடுபட்டிருப்பதால் ட்ரெண்ட் மாறியிருப்பதாகவே தெரிகிறது.
Published by:Sheik Hanifah
First published: