ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபல ஒளிப்பதிவாளர் வெளியிட்ட ஒரே ஒரு போட்டோ - ‘துப்பாக்கி 2’ உருவாகிறதா?

பிரபல ஒளிப்பதிவாளர் வெளியிட்ட ஒரே ஒரு போட்டோ - ‘துப்பாக்கி 2’ உருவாகிறதா?

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

“துப்பாக்கி படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் திட்டம் இருக்கிறது. அந்த படத்தின் கதையை மிஞ்சும் அளவிற்கு கதை அமைந்தால் துப்பாக்கி படம் 2-வது பாகம் இயக்குவேன்” - ஏ.ஆர்.முருகதாஸ்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  ஏ.ஆர்.முருகதாஸ் முதன் முதலாக விஜய்யுடன் கூட்டணி அமைத்த படம் துப்பாக்கி. இந்தப் படத்தில் ஜெயராம், காஜல் ஆகர்வால், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து கத்தி, சர்கார் ஆகிய படங்களிலும் விஜய் - ஏர்.முருகதாஸின் கூட்டணி வெற்றியையே கொடுத்தது.

  இந்நிலையில் மீண்டும் துப்பாக்கி 2 படத்தின் மூலம் நான்காவது முறையாக இந்தக் கூட்டணி இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.

  இதனிடையே துப்பாக்கி படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி படத்தின் புகைப்படங்களை ஒன்றாக்கி பதிவிட்டிருப்பதால், துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதைத் தான் சந்தோஷ் சிவன் மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பதாகவும், மீண்டும் சந்தோஷ் சிவன் -விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைய இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by Santosh Sivan ISC ASC (@sivan_santosh) on  கொரோனா ஊரடங்கு முடிவடைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னர் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  முன்னதாக துப்பாக்கி 2 பற்றி பேட்டியளித்திருந்த ஏ.ஆர்.முருகதாஸ், “கத்தி, துப்பாக்கி இரண்டு படங்களுமே அதன் இரண்டாம் பாகத்தை கருத்தில் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கும். துப்பாக்கி படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் திட்டம் இருக்கிறது. அந்த படத்தின் கதையை மிஞ்சும் அளவிற்கு கதை அமைந்தால் துப்பாக்கி படம் 2-வது பாகம் இயக்குவேன்” என்று கூறியிருந்தார்


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: A.R.murugadoss, Actor vijay, Thuppakki 2