முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் தந்தை மற்றும் மகன் - பிரபல இயக்குனர் வாழ்த்து

ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் தந்தை மற்றும் மகன் - பிரபல இயக்குனர் வாழ்த்து

ஏ.ஆர்.ரஹ்மான்,ஏ.ஆர்.அமீன்

ஏ.ஆர்.ரஹ்மான்,ஏ.ஆர்.அமீன்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் விக்னேஷ் சிவன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மன நிம்மதி என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. சில நேரங்களில் எதிர்பாராமல் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து சிறிது விலகி நிற்க நமக்கு இசை தேவைப்படுகிறது. அந்த இசையில் நாம் நம்மையே சில நேரங்களில் மறந்துவிடக்கூடும். அப்படி தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாள் இன்று.

ஏ.ஆர்.ரஹ்மான் 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார். இவரின் குடும்பம் இசைக் குடும்பம் என்பதால் சிறு வயதிலிருந்தே இசையில் இவருக்கு ஆர்வம் அதிகம். தனது 11 வது வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் பல இசையமைப்பாளர்களுடன் சேர்ந்து பணியாற்றி உள்ளார். இதையடுத்து டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார். பின்னர் 1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். தனது முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டிச்சென்ற அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

அதை தொடர்ந்து காதலன், மின்சார கனவு இப்படி  பல திரைப்படங்களில் இசையின் மூலம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளியான slum dog millionaire என்ற படத்திற்காக உலக அளவில் திரைத்துறையில் உயரிய விருதான இரண்டு ஆஸ்கார் விருதை தட்டிச்சென்றார். அன்றிலிருந்து ஆஸ்கார் நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

இவர் ஆஸ்கார் விருது மட்டுமில்லாமல் கோல்டன் குளோப் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பல பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மகன் அமீனுக்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர்.அமீன் ஓ காதல் கண்மனி உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். வளர்ந்து வரும் பின்னணி பாடகர் என்ற விருதுகளையும் பெற்றுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீனுக்கும் இன்றுதான் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Happy BirthDay, Music director ar rahman