நயனுடன் இருக்கும் புதிய புகைப்படத்தை வெளியிட்ட விக்கி...

நயன் - விக்கி

இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவுடன் இருக்கும் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 • Share this:
  நடிகை நயன்தாரா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவர் நயன்தாரா. 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் இயக்கத்தில் நானும் ரவுடி தான் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார். அந்த படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

  அந்த படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்த நயன்தாரா, பின்பு வாழ்க்கையிலும் அவருடன் இணைய தயாராகி விட்டார் என பல விருது வழங்கும் விழாவில் இருவரையும் சக நடிகர்கள் செல்லமாக கலாய்த்து உள்ளனர். சமூக வலைதளங்களில் மிகவும் கியூட்டாக வலம் வரும் ஜோடிகளில் இவர்களும் ஒருவர். அடிக்கடி இருவரும் சேர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று ஒன்றாக நேரம் செலவிடுவார்கள். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். மேலும் இருவருக்கும் திருமணம் எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஆனால் அதுகுறித்து எந்த ஒரு பதிலும் இருவரும் இதுவரை சொல்லவில்லை.

  இந்நிலையில் நயன் விக்கியுடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு தலைவி, சூப்பர், க்யூட் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

      
  View this post on Instagram

   

  A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

  நடிகை நயன் தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல இரண்டு காதல் ஆகிய மூன்று படத்திலும் நடித்து வருகிறார். மேலும் 2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் தர்பார், மூக்குத்தி அம்மன் என இரண்டு திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: