பரியேறும் பெருமாள் படத்துக்காக விக்னேஷ் சிவன் எடுத்த புது முயற்சி: திரையரங்குகள் அதிகரிப்பு

news18
Updated: September 30, 2018, 8:05 PM IST
பரியேறும் பெருமாள் படத்துக்காக விக்னேஷ் சிவன் எடுத்த புது முயற்சி: திரையரங்குகள் அதிகரிப்பு
விக்னேஷ் சிவன்
news18
Updated: September 30, 2018, 8:05 PM IST
பரியேறும் பெருமாள் படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் வித்தியாசமான முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் பரியேறும் பெருமாள். இந்தப் படத்தில் கதிர் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். கடந்த 28-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் . வசூல் இருக்கிறதா என்றால் இல்லை என்கிறார்கள் படக்குழுவினர். இதற்கு காரணம் பல்வேறு மல்டி பிளக்ஸில் ஒரு காட்சி மட்டுமே பரியேறும் பெருமாள் படத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்ட படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், மக்களின் பேராதரவினால் திரையரங்குகளும் காட்சிகளும் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில் படத்தை பல்வேறு வழிகளில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் களமிரங்கியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்க பதிவில், ``அன்புடைய அமீர் கான், அமிதாப்பச்சன், தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தை பார்த்து மகிழ இருக்கிறோம். அதே நேரத்தில் நீங்களும் பா.ரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான, மனித நேயத்தையும், மாறாத ஏற்றத்தாழ்வையும் பேசும் பரியேறும் பெருமாள் எனும் மிகச்சிறந்த படத்தைப் பார்த்து ஆதரிக்க வேண்டுகிறோம்" என்று அமீர்கான், அமிதாப்பச்சன் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

 இந்த ட்வீட்டை பார்த்த பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப் மும்பையில் சப் டைட்டிலுடன் திரையிடப்படுகிறதா என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு மும்பை அரோரா திரையரங்கில் சப்-டைட்டிலுடன் திரையிடப்படுவதாக பதிலளித்தார்.

பாலிவுட் வரை பரியேறும் பெருமாள் என்ற கலைப் படைப்பை கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் செயல்படும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
First published: September 30, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...