• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ‘தல’ கூட ஒரு புகைப்படம்... வாழ்நாள் கனவு நனவாகிவிட்டது - விக்னேஷ் சிவன்

‘தல’ கூட ஒரு புகைப்படம்... வாழ்நாள் கனவு நனவாகிவிட்டது - விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவன் கிரிக்கெட் வீரர் தோனியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் தனது வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இயக்குநர் விக்னேஷ் சிவன் கிரிக்கெட் வீரர் தோனியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் தனது வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதைத் தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களையும் இயக்கி வெற்றி இயக்குநராகவும், இயக்குநர் மட்டுமின்றி பாடலாசிரியராகவும் வலம் வருகிறார். ‘நானும் ரவுடிதான்’ படத்துக்கு பிறகு நயன்தாராவின் நெருங்கிய நண்பராக மாறிய அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    கிரிகெட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவருக்கு மகேந்திர சிங் தோனியை மிகவும் பிடிக்கும். சமீபத்தில் நடைபெற்ற டி20 தொடரில் தோனி பெயர் இடம்பெறாததற்கு பிசிசிஐ-க்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், “தலைவன் தோனி இல்லாத இந்திய டி-20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்க இதயம் உடைந்தது போல் உள்ளது. மோசமான தேர்வுக்குழு, ஆண்டவன்தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று கூறியிருந்தார்.



    இந்த நிலையில் தோனியை சந்தித்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “எனது வாழ்நாள் கனவு நனவாகிவிட்டது. தல தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட தருணம் எனது வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. இந்த அதிசயத்தை நடக்க வைத்த கடவுளுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

    Also Watch : கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை மீட்கப்படும் வீடியோ!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: