நயன்தாரா இன்னொருவருடன் ஜோடியாக நடிப்பதைப் பார்த்து பொறாமைப்படாதது இதுதான் முதல்முறை - விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

முதல்முறையாக நயன்தாரா இன்னொருடன் ஜோடியாக நடிப்பதைப் பார்த்து பொறாமைப்படவில்லை என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

  • Share this:
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு பின்னர் ‘பாவகதைகள்’ என்ற ஆந்தாலஜியில் பணியாற்றிய விக்னேஷ், தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். அவருடன் சமந்தா, நயன்தாரா ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்துக்குப் பின்னர் விக்னேஷ் சிவன் - விஜய் சேதுபதி - நயன்தாரா இணையும் இரண்டாவது படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் விக்னேஷ் காதலர் தினத்தன்று காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அப்டேட் வர இருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நயன்தாரா இன்னொருவருக்கு ஜோடியாக நடிப்பதைப் பார்த்து முதல்முறையாக பொறாமைப்படவில்லை என்று விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். அதேபதிவில் சமந்தா மிகவும் அற்புதமானவர் என்று எழுதியிருக்கும் விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல் கொண்டாட்டத்தில் உங்களையும் இணைத்துக் கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)






விக்னேஷ் சிவன் வெளியிட்டிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் பட போஸ்டரில், நயன்தாரா, சமந்தா இருவரது பின்புறம் மட்டும் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: