காதலர் தினத்தில் முக்கிய அறிவிப்பு வரும் - விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

காதலர் தினத்தன்று முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு பின்னர் ‘பாவகதைகள்’ என்ற ஆந்தாலஜியில் பணியாற்றிய விக்னேஷ், தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். அவருடன் சமந்தா, நயன்தாரா ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்துக்குப் பின்னர் விக்னேஷ் சிவன் - விஜய் சேதுபதி - நயன்தாரா இணையும் இரண்டாவது படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் விக்னேஷ் காதலர் தினத்தன்று காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அப்டேட் வர இருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.விக்னேஷ் சிவனின் இந்த ட்வீட்டைப் பார்த்த ரசிகர்கள் காதலர் தினத்தில் அப்படி என்ன அப்டேட்டை வெளியிடப்போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

2020-ம் ஆண்டு தொடக்கத்தில் ‘தர்பார் திரைப்படமும் இறுதியில் மூக்குத்தி அம்மன் திரைப்படமும் நயன்தாரா நடிப்பில் வெளியான நிலையில் ‘நெற்றிக்கண்’,‘அண்ணாத்த’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா.
Published by:Sheik Hanifah
First published: