ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'அரவணைப்பில் என் குடும்பம்' இரட்டைக் குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய விக்னேஷ் சிவன் -நயன்தாரா!

'அரவணைப்பில் என் குடும்பம்' இரட்டைக் குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய விக்னேஷ் சிவன் -நயன்தாரா!

குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன்

குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன்

பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், ஒரு கையின் அரவணைப்பில் நயன் தாராவையும், மறு கைக்குள் இரண்டு குழந்தைகளையும் வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்களது இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பான விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு ஹார்ட்களை குவித்து வருகிறது.

நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர். இதைத் தொடர்ந்து இருவரும் வாடகை தாய் மூலமாக இரட்டைக் குழந்தையை பெற்றெடுத்தனர். கடந்த அக்டோபர் 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கு புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது இரட்டைக்குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை விக்கி-நயன் ஜோடி பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் தங்களது குடும்ப புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ்சிவன். பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், ஒரு கையின் அரவணைப்பில் நயன் தாராவையும், மறு கைக்குள் இரண்டு குழந்தைகளையும் வைத்துள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)மகாநதி படத்தில் வரும் பொங்கலோ பொங்கல் பாடலை இணைத்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வழக்கம்போல குழந்தைகளின் முகத்தை காண்பிக்காமல் எமோஜி வைத்து மறைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

First published:

Tags: Nayanthara, Pongal 2023, Vignesh Shivan