• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • என்றும்... என்றென்றும் நயன்தாரா தான் - விக்னேஷ் சிவன் பதில்!

என்றும்... என்றென்றும் நயன்தாரா தான் - விக்னேஷ் சிவன் பதில்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

  • Share this:
    நயன்தாராவுடன் எந்தப் பிரிவும் ஏற்படவில்லை என்பதை தனது சமூக வலைத்தள பக்க பதிவின் மூலம் விக்னேஷ் சிவன் தெளிவுபடுத்தியுள்ளார்.

    தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக வலம் வருவது அனைவரும் அறிந்ததே. நானும் ரவுடிதான் படத்தில் இருவருக்கும் மலர்ந்த காதல் இன்று வரை தொடர்கிறது. இவர்கள் இருவரும் எப்போது திருமணத்தை அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் இருவருக்குமான நட்பில் பிளவு ஏற்பட்டிருப்பதாக பரவலாக பேசப்பட்டது.

    அதற்குக் காரணம் ஜீ தமிழ் சினிமா விருது விழாவில் நயன்தாரா தனியாக வந்து கலந்து கொண்டது தான். இதைக் காரணமாக வைத்து இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றெல்லாம் தகவல்கள் காட்டுத் தீயாக பரவின. ஆனால் எங்களுக்குள் எந்த பிரிவும் ஏற்படவில்லை என்று இருவரும் ஒரே குரலில் தெரிவித்தனர்.



    இந்நிலையில் தனது சமூகவலைத்தள பக்கத்தில் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் விக்னேஷ் சிவன், என்றும் என்றென்றும் நயன்தாரா தான் என்று கூறியுள்ளார். மேலும் விருது விழாவின் போது நயன்தாரா அணிந்திருந்த அதே உடையில் தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மற்றொரு புகைப்படத்தில் மிஸ் விக்கீஸ் என்ற சிப்ஸை கையில் வைத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார் நயன்தாரா.



     




    View this post on Instagram




     

    🥰


    A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on






    இந்தப் பதிவின் மூலம் தங்களைப் பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

    மேலும் படிக்க: ‘இப்ப வந்து மோதுடா’... சூரரைப் போற்று படத்தின் மிரட்டலான டீசர் வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: