முதல்வரின் மனைவியாகும் வித்யாபாலன்

news18
Updated: March 13, 2018, 4:37 PM IST
முதல்வரின் மனைவியாகும் வித்யாபாலன்
வித்யாபாலன் - நடிகை
news18
Updated: March 13, 2018, 4:37 PM IST
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்பட உள்ளது. இப்படத்தில் என்.டி ஆரின் மனைவி பசவதாரகமாக நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் ,தெலுங்கு ,மலையாளம்,கன்னடம்,இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான மனிதர்களின் வாழ்க்கை , திரைப்படமாக வெளிவருவது வழக்கம். தமிழில் பாரதியார்,பெரியார்,காமராஜர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு கூட திரைப்படங்களாக வெளி வந்துள்ளன.இந்தியிலும் மேரி கோம், மில்கா சிங் உள்ளிட்ட திரைப்படங்களையும் அந்த வரிசையில் சேர்க்கலாம். தெலுங்கில் தற்போது வெளிவரத் தயாராகியிருக்கும் ”மகாநதி” நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படங்களின் வரிசையில் தெலுங்கு
நடிகர் பாலகிருஷ்ணா தயாரிப்பில் இயக்குநர் தேஜா இயக்கத்தில் முன்னாள் ஆந்திர முதல்வரும், பழம்பெரும் நடிகருமான நந்தமூரி ராமாராவ் எனப்படும் என்டிஆரின் வாழ்க்கைச் சித்திரம்  திரைப்படமாகவிருக்கிறது. இப்படத்தில் என்டிஆரின் கதாபாத்திரத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளார்.

மேலும் வித்யாபாலனை நாயகியாக தேர்ந்தெடுக்க மேட்ச் ஹண்டர் என்ற செயலி பயன்படுத்தப்பட்டதாகவும், வித்யாபாலனுக்கு முன்பாக நடிகை நித்யாமேனனை படக்குழு அணுகியதாகவும் கூறப்படுகிறது

இந்தியில் டர்ட்டி பிக்சர், கஹானி, துமாரி சுலு உள்ளிட்ட படங்களில் வலிமையான பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் வித்யாபாலன் இக்கதைக்கு பொருத்தமாக இருப்பார் என படக்குழு மற்றும் இயக்குநர் நம்பியதால் வித்யாபாலனுக்கு இந்த வாய்ப்பு சென்றதாக கூறப்படுகிறது.
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்