• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள சர்வைவர் நிகழ்ச்சி - வைரலாகும் ப்ரோமோ வீடியோ!

ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள சர்வைவர் நிகழ்ச்சி - வைரலாகும் ப்ரோமோ வீடியோ!

சர்வைவர்

சர்வைவர்

பிக்பாஸ் ஷோவுக்கு கடும் போட்டியாக இந்த சர்வைவர் நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
சர்வதேச அளவில் வெற்றிபெற்ற நிகழ்ச்சியான சர்வைவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செப்டம்பர் 12ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. ஆக்ஷன் கிங் அர்ஜூன் முதன்முறையாக சின்னத்திரையில் தொகுப்பாளராக ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் களமிறங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் 18 போட்டியாளர்கள் தனித் தீவு ஒன்றில் விடப்படுவார்கள். அங்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் அங்கிருக்கும் பொருட்களை வைத்து அவர்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும். இதற்கிடையே டாஸ்குகளும் இருக்கும். மன வலிமை, உடல் வலிமை சோதிக்கும் வகையில் இருக்கும் அந்த டாஸ்குகளில் வெற்றி பெற்று இறுதி வரை தாக்குப்பிடிப்பவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

வித்தியாசமான மற்றும் மிரட்சியான இருக்கப்போகும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சிக்கு ஏற்ப தொகுப்பாளரை தேடிய ஜீ தமிழ் தொலைக்காட்சி, தமிழ் திரைத்துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் உடைய ஆக்ஷன் கிங் அர்ஜூனை ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான புரோமோவை அதிகாரப்பூர்வமாக ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. மேலும் போட்டியாளர்கள் அடங்கிய ப்ரோமோ ஒன்றும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் விஜயலட்சுமி, விக்ராந்த், நந்தா, காயத்திரி ரெட்டி, ஸ்ருஷ்டி டாங்கே, உமாபதி ராமையா, பெசன்ட் ரவி, பார்வதி உள்ளிட்டோர் உள்ளனர். ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ள இந்த ப்ரோமோவில், போட்டியாளர்கள் தங்களைக் காப்பாற்றி கொள்வதற்காக கயிறு, கோடாரி போன்ற ஆயுதங்களை கொண்டு காட்டுக்குள் செல்வதும் காட்டப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சர்வைவர் நிகழ்ச்சியின் ஆங்கில பதிப்பில் போட்டியாளர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கப்பட்டு தொலைதூரப் பகுதிக்கு அனுப்பப்பட்டு அவர்கள் ஏறத்தாழ நாற்பது நாட்கள் உயிர் வாழ வேண்டும் என கூறப்பட்டது. அதேபோல தமிழ் வெர்ஷனிலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ப்ரோமோவின் பிரமாண்ட காட்சிகள் முடிவடைந்த பின்னர் இறுதியாக "உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ" என குறிப்பிட்டுள்ளனர்.

Also read... நடிகர் நட்டியின் புதிய சைக்கோ த்ரில்லர் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் பிரபல சீரியல் நடிகை!

மேலும் அந்த ப்ரோமோவில் ஒருவர் மலையின் உச்சியை அடைவதையும் காட்டுகிறது. அர்ஜுன் போட்டியாளர்களுக்கு வழிகாட்டுகிறார், அதன்படி போட்டியாளர்கள் நடந்து கொள்கின்றனர். அப்போது அவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. சேதுபதியும் இந்த ப்ரோமோ வீடியோவை ஷேர் செய்து நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சி ஜீ தமிழில் செப்டம்பர் 12ம் தேதி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

பிக்பாஸ் ஷோவுக்கு கடும் போட்டியாக இந்த சர்வைவர் நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் இந்த ப்ரோமோவை பார்த்து நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியும் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதால் இந்த இரண்டு நிகழ்ச்சிக்கும் இடையே போட்டிகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: