• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவின் 'வாடிவாசல்' திரைப்படம் - கொரோனோவால் தாமதமாகிறதா?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவின் 'வாடிவாசல்' திரைப்படம் - கொரோனோவால் தாமதமாகிறதா?

சூர்யாவின் 'வாடிவாசல்'

சூர்யாவின் 'வாடிவாசல்'

இந்த படத்தில் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்கள் நடிக்க இருப்பதால், ஒட்டுமொத்த குழுவினரின் பாதுகாப்பும் முக்கியமானது. எனவே படத்தின் படப்பிடிப்பை தொடங்க காத்திருக்கலாம் என இயக்குனர் முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. '

  • Share this:
சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பபெற்ற நிலையில் நடிகர் சூர்யா தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் வெற்றிமாறன், தான் இயக்கிய அனைத்து படங்களிலும் 100% வெற்றியை கொடுத்துள்ளார். மேலும் அவரது படத்திற்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபத்திய தகவலின்படி, இயக்குனர் வெற்றிமாறன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக காத்திருக்கிறார். இதனால் அவர் சூரியாவுடன் 'வாடிவாசல்' படப்பிடிப்பை தொடங்க தாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்கள் நடிக்க இருப்பதால், ஒட்டுமொத்த குழுவினரின் பாதுகாப்பும் முக்கியமானது.

எனவே படத்தின் படப்பிடிப்பை தொடங்க காத்திருக்கலாம் என இயக்குனர் முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 'வாடிவாசல்' படத்தில் சூர்யா முற்றிலும் புதிய தோற்றத்தில் காணப்படுவார் என கூறப்பட்டுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தில் இயக்குனர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார். இது ஜி. வி. பிரகாஷின் 75 வது படம் ஆகும். 'வாடிவாசல்' படத்தை ’கலைப்புலி’ எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது, மேலும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். இதனிடையே வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

சூர்யாவின் 'வாடிவாசல்'


இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் நடந்து வருகிறது. பெயரிடப்படாத இந்த திரைப்படம் சம்மரில் திரைக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த படத்தில் சூரியின் கதாபாத்திரம் அவரை ஒரு நல்ல நடிகராக நிலைநிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இதனிடையே கலைப்புலி தாணு, பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம், சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள 40-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: