வெனம் 2 - டாம் ஹார்டியின் நடிப்பை தமிழிலேயே பார்க்கலாம்...!

வெனம் 2

இந்தியா ஹாலிவுட் படங்களின் முக்கிய சந்தையாகிவிட்டபடியால் வெனம் 2 படத்தை ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய பிராந்திய மொழிகளிலும் வெளியிடுகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
2018 இல் வெனம் வெளியானது. ஒரு ரிப்போர்டாpன் உடலுக்குள் ஏலியன் புகுந்து கொள்வதுதான் ஒன்லைன். நம்மூர் படங்களில் வரும் பேய் மாதிரியில்லை. உடலுக்குள்ளும் இருக்கும், தேவைப்பட்டால் வெளியேயும் வரும். உருவமும் எடுக்கும், வடிவம் இல்லாமலும் இருக்கும்... கிட்டத்தட்ட ஒரு யூனிவர்சல் டைப். 

வெனம் பம்பர் ஹிட் இல்லை. ஆனால், இதுபோன்ற படங்களை தொடர்ந்து எடுக்கையில், முதல் பாகம் பார்த்தவர்கள், 'என்னதான் சொல்லியிருக்காங்க' என்று இரண்டாவது, மூன்றாவது பாகத்தைப் பார்க்க வருவார்கள். அது எவ்வளவு குப்பையாக இருந்தாலும். இந்த இடத்தில் காஞ்சனாவை நினைவுப்படுத்திக் கொள்ளவும்

Also read... மருத்துவமனை செட்டை கொரோனா நோயாளிகள் பயன்பாட்டு அளித்த ராதே ஷ்யாம் படக்குழு

வெனம் இரண்டாவது பாகத்தை எடுத்துள்ளனர். வெனம் - லெட் தேர் பி கார்னேஜ். ஏலியன் இதில் டாம் ஹார்டிக்கு ரொம்பவே கட்டுப்பட்டு சொல் பேச்சு கேட்கிறது (டிரைலரில் அப்படித்தான் தெரிகிறது). வானுயர கட்டடத்தில் தாவுவது, ஹெலிகாப்டரை உடைப்பது என்று வழக்கமான சூப்பர்ஹீரோத்தனங்கள் உள்ளன. திரையரங்கில் வெளியிட்டால் மட்டுமே கல்லா கட்ட முடியும் என்பதால் செப்டம்பரில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதற்குள் கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துவிடும் என்று நம்புகிறார்கள்.

இந்தியா ஹாலிவுட் படங்களின் முக்கிய சந்தையாகிவிட்டபடியால் வெனம் 2 படத்தை ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய பிராந்திய மொழிகளிலும் வெளியிடுகின்றனர். செப்டம்பரில் திரையரங்குகள் திறந்தால் வெனத்தின் அட்டகாசத்தை திரையரங்கில் அதுவும் தமிழில் கண்டு ரசிக்கலாம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: