முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘வெண்ணிலா கபடி குழு 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘வெண்ணிலா கபடி குழு 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெண்ணிலா கபடி குழு 2

வெண்ணிலா கபடி குழு 2

வெண்ணிலா கபடி குழு 2 டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் ஜூலை 12-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

  • Last Updated :

வெண்ணிலா கபடி குழு 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

2009-ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் வெண்ணிலா கபடி குழு. கபடி போட்டியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில் சூரி, சரண்யா மோகன், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சுசீந்திரன். படத்தில் அதிக பரோட்டக்களை சாப்பிடும் காட்சியில் நடித்து நகைச்சுவை நடிகராக பிரபலமானார் சூரி. இந்தப் படத்துக்கு பின்னர் பரோட்டா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார் சூரி.

தற்போது இந்தப் படத்தின் மூலக்கதையில், இயக்குநர் செல்வசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ளது வெண்ணிலா கபடி குழு 2. படத்தின் ஹீரோவாக விக்ராந்த் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அர்த்தனா பினு நடித்துள்ளார். இவர்களுடன் சந்தோஷ், பசுபதி, சூரி, கிஷோர், கஞ்சா கருப்பு, அப்புகுட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு ’யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் ஜூலை 12-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வீடியோ பார்க்க: காப்பியடித்து மாட்டிக்கொண்ட இசையமைப்பாளர்கள்!

First published:

Tags: Vennila Kabaddi Kuzhu 2