முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Narappa: நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தெலுங்கு அசுரன்...!

Narappa: நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தெலுங்கு அசுரன்...!

நாரப்பா

நாரப்பா

வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கில் தயாராகியிருக்கும் த்ரிஷ்யம் 2 படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இந்த ரீமேக்கில் வெங்கடேஷ் நடித்துள்ளார்.

பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து வெற்றிமாறன் தனது சொந்த கற்பனையில் உருவாக்கிய கதை அசுரன். தனுஷ், மஞ்சு வாரியர் நடித்திருந்த இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரித்திருந்தார். படம் பம்பர் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து தாணுவும், தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவும் இணைந்து தெலுங்கில் அசுரனை ரீமேக் செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாரப்பா என பெயர் வைக்கப்பட்ட இந்த ரீமேக்கில் தனுஷ் நடித்த வேடத்தில் வெங்கடேஷும், மஞ்சு வாரியர் வேடத்தில் ப்ரியாமணியும் நடித்தனர். இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ், கார்த்திக் ரத்னம், முரளி சர்மா, சம்பத் ராஜ் ஆகியோரும் நடித்தனர். இசை மணி சர்மா. ஸ்ரீகாந்த் அடலா படத்தை இயக்கியிருந்தார். தற்போது படம் முடிந்த நிலையில், படத்தை அமேசான் பிரைமில் நேரடியாக வெளியிடுகின்றனர். சுமார் 35 கோடிகள் இதற்காக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

Also read... Suryavamsam: பொன்விழா ஆண்டில் விக்ரமனின் சூர்யவம்சம்...!

வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கில் தயாராகியிருக்கும் த்ரிஷ்யம் 2 படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. அசுரனின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா அடுத்த மாதம் வெளியாகும். தேதியை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Asuran