• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மங்காத்தா படம் விஜய்க்கு பிடித்திருந்தது; வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார் - வெங்கட் பிரபு

மங்காத்தா படம் விஜய்க்கு பிடித்திருந்தது; வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார் - வெங்கட் பிரபு

விஜய் | வெங்கட் பிரபு | அஜித்

விஜய் | வெங்கட் பிரபு | அஜித்

மங்காத்தா படம் மிகவும் பிடித்திருந்ததால் விஜய் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

  • Share this:
    வெங்கட் பிரபு - அஜித் கூட்டணியில் உருவான மங்காத்தா படத்துக்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனி இடமுண்டு. இன்றும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த கொரோனா ஊரடங்கில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுடன் யூடியூபில் உரையாடிய வெங்கட் பிரபு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த் தொடங்கி கமல்ஹாசன், விஜய், அஜித், சிம்பு உள்ளிட்டோர் பற்றி யுகேந்திரன் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

    அப்போது விஜய் புகைப்படத்தைக் காட்டி யுகேந்திரன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த வெங்கட் பிரபு, “தளபதி கூட சிவகாசி படத்தில் நான் நடித்திருக்கிறேன். எனக்கு ஒரு சின்ன ரோல் தான் பேரரசு கொடுத்திருந்தார். முன்பிருந்தே அவருடன் எனக்கு பழக்கம் இருந்தது. மங்காத்தா படம் முடிந்ததும் எனக்கு வீட்டில் அழைத்து விருந்து கொடுத்தார். ஏனென்றால் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்கு பின்னர் நிறைய ஐடியாக்கள் பேசினோம். எப்போது வேண்டுமானால் நீங்கள் வரலாம் என்று அப்போது என்னிடம் விஜய் சொல்லி இருந்தார். அவருக்கு பிடித்த கதை சொல்லி அவரை இம்ப்ரஸ் பண்ண வேண்டும். மிக விரைவில் அவருடன் இணைந்து வித்தியாசமான படம் பண்ண வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

    இப்போது விஜய் வித்தியாசமான கதைகளில் நடிக்கிறார். கமர்ஷியல் கோணத்தில் புதிதாகச் செய்ய வேண்டும் என நினைக்கிறார். நிறைய முதலீடு என்பதால் அனைவருமே சம்பாதிக்க வேண்டும் என்று தான் விஜய் நினைக்கிறார். பாலிவுட் நடிகர்கள் எல்லாம் மாறி வருகிறார்கள். அஜித் நேர்கொண்ட பார்வையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். விரைவில் தல, தளபதி இருவரும் விரைவில் புதிய மாற்றத்தை உருவாக்குவார்கள்’ என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.



    வெங்கட் பிரபுவைத் தொடர்ந்து யுகேந்திரனும் அஜித், விஜய் உடனான பயணம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: