Home /News /entertainment /

நெட்ஃபிளிக்ஸில் வெளியான வெங்கட் பிரபுவின் ஆர்.கே.நகர்!

நெட்ஃபிளிக்ஸில் வெளியான வெங்கட் பிரபுவின் ஆர்.கே.நகர்!

ஆர்.கே.நகர்

ஆர்.கே.நகர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நெட்ஃபிளிக்ஸில் வெங்கட் பிரபுவின் ஆர்.கே.நகர் திரைப்படம் வெளியாகியுள்ளது.

    இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் உருவான படம் ஆர்.கே.நகர். சரவணராஜன் இயக்கத்தில் வைபவ், சனா அல்தாஃப், அஞ்சனா கீர்த்தி, இனிகோ பிரபாகரன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்திருந்தார்.

    அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு திரைக்கு வராமல் தள்ளிப் போனது. இந்நிலையில் ரிலீசாகாமல் இருந்த இந்தப் படத்தை நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

    இதனிடையே பட ரிலீஸ் தள்ளிப்போவது குறித்து கடந்த ஏப்ரல் மாதத்தில் வீடியோ வெளியிட்டிருந்த இயக்குநர் வெங்கட் பிரபு, “இந்தப் படத்தில் எந்தவித அரசியலும் கிடையாது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். அரசியல் இல்லை என்று சொன்ன பின்பும் இப்படத்தை வெளியிடக் கூடாது என்று சிலர் எச்சரித்தனர். அவர்கள் பேரை வெளியே சொல்ல விரும்பவில்லை. நாங்கள் பண்ணாத தப்புக்கு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். எல்லோருக்கும் தல பாணியில் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான் வாழு, வாழ விடு” என்று கூறியிருந்தார்.

    Also see:

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: RK Nagar

    அடுத்த செய்தி