இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் காலமானார்...!

நடிகர் பிரேம்ஜி அமரன், மணிமேகலை, இயக்குனர் வெங்கட்பிரபு,

தாயாரின் மறைவால் வாடும் இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் பிரேம்ஜி அமரன் இருவரும் திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இயக்குனர், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியும், வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோரின் தாயாருமான மணிமேகலை நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 69. 

கங்கை அமரன் இளையராஜாவின் இளைய சகோதரர். ஒன்றாக சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தவர்கள். இளையராஜாவின் நிழலில் இருந்த கங்கை அமரன் கரகாட்டக்காரன் உள்பட பல படங்களை இயக்கினார். வாழ்வே மாயம் உள்பட பல படங்களுக்கு தனியாக இசையமைத்தார். நல்ல பாடகர், பாடலாசிரியர். அவரது மனைவி மணிமேகலை

Also read... நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

உடல்நலக்குறைவால் மணிமேகலை சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவு நண்பர்கள், உறவினர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

தாயாரின் மறைவால் வாடும் இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் பிரேம்ஜி அமரன் இருவரும் திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: