Venkat Prabhu : வெங்கட் பிரபுவின் தாயார் மணிமேகலை மறைவு - திரையுலகினர் அதிர்ச்சி

நடிகர் பிரேம்ஜி அமரன், மணிமேகலை, இயக்குனர் வெங்கட்பிரபு,

திடீரென மணிமேகலை மறைந்த செய்தி தமிழ் திரையுலகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் மறைந்த மணிமேகலை குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
திறமையான இசை அமைப்பாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான கங்கை அமரனின் மனைவி காலமானார்.

கங்கை அமரனின் மனைவி மணிமேகலை மே 9ம் தேதி இரவு 11.10 மணிக்கு இயற்கை எய்தியுள்ளார். 69 வயதான அவர் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மணிமேகலை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரனின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது கணவர் கங்கை அமரன் மற்றும் மகன்கள் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியைக் கேட்டதும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தாயுடன் மிகவும் நெருக்கமாக இருந்த சகோதரர்கள் இந்த இழப்பால் உடைந்து போகியுள்ள நிலையில், அவர்களின் நெருங்கிய நண்பர்கள் வட்டம் அவர்களை ஆறுதல்படுத்த தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.

திடீரென மணிமேகலை மறைந்த செய்தி தமிழ் திரையுலகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் மறைந்த மணிமேகலை குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

மணிமேகலை கங்கை அமரனின் மரணத்திற்கு பிரபலங்களான ஜீவா, ராதிகா சரத்குமார், நடிகர் ஜீவா, டி.டி நீலகண்டன், சிபி சத்தியராஜ், சாம் சி.எஸ்., அதுல்யா ரவி, பிரசன்னா மற்றும் அருண் விஜய் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ALSO READ :  வீட்டை விட்டு வெளியே சென்று ஓராண்டுக்கும் மேல் ஆகிறது, தனியாகவே இருக்கிறேன் இருப்பினும் கொரோனா- எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கவலை

மேலும் நடிகர் அருண் விஜய், இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன், ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பை சமாளிக்க கடவுள் உங்களுக்கு பலம் அளிப்பார். அம்மாவின் ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்க என் பிரார்த்தனை" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு தற்போது சிலம்பரசன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வரும் மானாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் டப்பிங் சமீபத்தில் (மே 6) தொடங்கியது, டப்பிங் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலானது. மானாடு திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் தற்போது வரை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: