’மாநாடு டீசரை டெனெட் படத்துடன் ஒப்பிடுவது கெளரவமாக இருக்கிறது’ - வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு - சிம்பு

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ம் தேதி ‘மாநாடு’ படத்தின் டீசர் வெளியானது.

 • Share this:
  ’மாநாடு’ படத்தின் டீசரை ‘டெனென்ட்’ படத்துடன் ஒப்பிட்டவர்களுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார்.

  வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

  காதலியை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகர் – குவியும் வாழ்த்துகள்!  சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ம் தேதி ‘மாநாடு’ படத்தின் டீசர் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்த டீசரை ஹாலிவுட் படமான ‘டெனென்டின்’ காப்பி என நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் தற்போது இந்த விமர்சனத்துக்கு இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார்.

  ”'மாநாடு' படத்தின் டீஸரை 'டெனெட்' படத்தோடு சிலர் ஒப்பிடுவது எங்களுக்குக் கவுரவம் தான். எனினும் துரதிர்ஷ்டவசமாக இதற்கும் அதற்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு 'டெனெட்' படம் புரியவே இல்லை. ட்ரெய்லருக்குக் காத்திருங்கள். அப்போது நீங்கள் அதை வேறொரு படத்துடன் ஒப்பிடலாம்" எனத் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: