Home /News /entertainment /

ஜோடி நம்பர் 1 வெங்கட்-நிஷாவை நினைவிருக்கிறதா?

ஜோடி நம்பர் 1 வெங்கட்-நிஷாவை நினைவிருக்கிறதா?

venkat- nisha

venkat- nisha

Venkat Nisha Images 2003-ஆம் ஆண்டில் நடிகை சுகன்யா நடிப்பில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் நாடகமான 'ஆனந்தம்' வழியாக நமக்கெல்லாம் மிகவும் பரீட்சியமான ஒரு நடிகர் - வெங்கட் சுப்பிரமணியன்.

    2003-ஆம் ஆண்டில் நடிகை சுகன்யா நடிப்பில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் நாடகமான 'ஆனந்தம்' வழியாக நமக்கெல்லாம் மிகவும் பரீட்சியமான ஒரு நடிகர் - வெங்கட் சுப்பிரமணியன்.

    ஆனந்தம் சீரியலில் பிரபல சினிமா நடிகை சுகன்யா, டெல்லி குமார், பிருந்தா தாஸ், ஸ்ரீ பிரியா, கமலேஷ் ஆகியோருடன் திரையைப் பகிர்ந்து கொண்ட வெங்கட் தனது முதல் சின்னத்திரை பயணத்தையே மிகவும் வெற்றிகரமாக ஆரம்பித்தார் என்றே கூறலாம். ஏனெனில் ஆனந்தம் சீரியல் 1,297 எபிசோட்களுடன் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஒளிபரப்பானது. 2003-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய இந்த தொடர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முடிந்தது.

    உண்மையில் வெங்கட் சுப்ரமணியன் தமிழர் அல்ல. இவர் 1983 ஆம் ஆண்டு, ஏப்ரல் 3 ஆம் தேதி தெலுங்கானாவின் வாரங்கலில் பிறந்தார். தன் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் கூட வெங்கட் பல மொழிகளைப் பேசக்கூடிய திறனை வளர்த்து கொண்டார், குறிப்பாக தமிழ் மொழியை!

    தங்கையின் முதல் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிய பாக்கிய லட்சுமி இனியா!


    தமிழ் சின்னத்திரையில் பிரபலம் அடைந்ததால் வெங்கட் சுப்பிரமணியன் தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னைக்கு குடிபெயர்ந்தார். அதன் பிறகு பல சூப்பர் ஹிட் டிவி சீரியல்களில் நடித்து தமிழ் டிவி சீரியலின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஆனார் - வெங்கட் சுப்பிரமணியன்! இவர் நடித்த சீரியல்களில் குலதெய்வம், செல்லமே, அலைகள், உறவுகள் சங்கமம், ரோஜா கூட்டம், ராஜகுமாரி, கல்யாண பரிசு, அத்திப்பூக்கள், திருமதி செல்வம் போன்றவைகள் குறிப்பிடத்தக்கது.

    வெங்கட் சுப்பிரமணியன் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, எப்படி பல மொழி பேசும் திறனை வளர்த்துக்கொண்டாரோ, அதேபோல நடனம் ஆடுவதில் திறமைசாலியாக திகழ்ந்தார். இவர் சூப்பர் சேலன்ஜ், ஜோடி நம்பர் 1 சீசன் 2-வில் கலந்து கொண்டு தன் நடனத்திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

    வெங்கட் சுப்பிரமணியன், தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிஷா என்பவரையே தன் மனைவியாக்கி கொண்டார் . இந்த காதல் ஜோடிக்கு 'மாயா' என்கிற பெயரில் ஒரு மகள் இருக்கிறாள். மாயாவின் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியானது தான், டிவி சீரியல் ரசிகர்கள் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்.

    venkat- nisha daughter


    நம்ம வெங்கட் சுப்பிரமணியனுக்கு இவ்வளவு பெரிய பொண்ணா? நம்பவே முடியவில்லையே! என்பது தான் அந்த ஹாட் டாப்பிக்! சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ள குறிப்பிட்ட புகைப்படத்தில், மாயா தன் அப்பா வெங்கட் அம்மா நிஷாவுடன் நிற்கிறார். ஆம்! அதுவொரு பேமிலி போட்டோ ஆகும்!

    நினைவூட்டும் வண்ணம், தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த வெங்கட் சுப்பிரமணியன், இடையில் நடிப்பதில் இருந்து விலகி வாழ்ந்து கொண்டு இருந்தார். தற்போது நீண்ட நாட்கள் கழித்து விஜய் டிவியின் “நம்ம வீட்டுப் பொண்ணு” சீரியலில் நடிக்கிறார். இந்த நாடகத்தில் வெங்கட், கதாநாயகனின் சித்தப்பாவாக, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Entertainment, Vijay tv

    அடுத்த செய்தி