நிம்மதியா வேலை செய்ய விடுங்கப்பா - வெங்கட் பிரபுவை புலம்ப வைத்த வதந்தி

வெங்கட் பிரபு

மாநாடு வெளியாகாது என்ற வதந்திக்கு இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 • Share this:
  வெங்கட்பிரபு இயக்கிய பார்ட்டி திரைப்படம் முடிந்து பல வருடங்களாகியும் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இப்படியொரு சூழலில்தான்நடிகர் சிம்புவை வைத்து மாநாடு படத்தை எடுத்து முடித்திருக்கிறார். படம் ஆரம்பிக்கும் முன் சிம்பு நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தால் வெங்கட்பிரபுவும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் பட்ட துன்பங்கள் சாதாரணமில்லை. அதைத்தாண்டி ஒருவழியாக படத்தை முடித்துள்ளனர்.  படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகையில் சிலர், சம்பள விஷயத்தில் வெங்கட்பிரபுக்கும், சுரேஷ் காமாட்சிக்கும் தகராறு, படம் பாதியில் நிற்கிறது என்று டிஆர்பிக்காக கொளுத்திப் போட்டனர். இதை படித்தவர்கள் இந்த வதந்தியை மேலும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து, மாநாடு வெளியாகாது என்ற லெவலுக்கு வதந்தியை கொண்டு சென்றனர். ஏற்கனவே பார்ட்டி படம் வெளியாகவில்லை. ஸ்மூத்தாகப் போய்க் கொண்டிருக்கும் மாநாடு படத்துக்கும் இப்படியொரு அவப்பெயர் என்றால் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும்.

  Also Read : அஜித்தின் புதிய படம் - தயாரிப்பாளர் யார் தெரியுமா?

     "யப்பா சாமி.. ஏன் ஏன் ஏன்.. தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க. மாநாடு படத்தின் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நிம்மதியா வேலை செய்ய விடுங்கப்பா" என்று எரிச்சல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

  மாநாட்டை கலைச்சுவிடுறதில்தான் சிலருக்கு என்னவொரு ஆனந்தம்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: