• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வேதாளம் தெலுங்கு ரீமேக்.. சிரஞ்சீவியின் தங்கையாக நடிப்பது யார் தெரியுமா?

வேதாளம் தெலுங்கு ரீமேக்.. சிரஞ்சீவியின் தங்கையாக நடிப்பது யார் தெரியுமா?

 சிரஞ்சீவி

சிரஞ்சீவி

தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ள வேதாளம் திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கலாம் என தகவல் வெளியாகிவுள்ளது.

  • Share this:
    அஜித்தின் வேதாளம் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்த வேடத்தை தெலுங்கில் செய்ய முன்னணி நடிகையை அணுகியிருக்கிறார்கள்.

    சிரஞ்சீவியின் இரண்டாம் வருகை ரீமேக் வருகையாக அமைந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது 150 வது படத்தில் சிரஞ்சீவி நடித்தார். அது தமிழில் வெளியான கத்தி படத்தின் ரீமேக். அடுத்து சைரா நரசிம்ம ரெட்டி, ஆச்சார்யா என இரு நேரடித் தெலுங்குப் படங்கள். நேற்று அவரது 153 வது படம் தொடங்கியது. இது மலையாள லூசிபரின் ரீமேக். மோகன்ராஜா இயக்குகிறார். இதையடுத்து வேதாளம் ரீமேக்கில் நடிக்கிறார்.



    இந்த ரீமேக்கை மெஹர் ரமேஷ் இயக்க, சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். முதலில் பவன் கல்யாணே இதில் நடிக்க ஆசைப்பட்டார். அரசியல் மற்றும் பிற கமிட்மெண்ட்களால் அவர் நடிக்க முடியாமல் போக, சிரஞ்சீவி நடிக்கிறார். வேதாளத்தில் நாயகியைவிட தங்கை கதாபாத்திரம் முக்கியமானது. அண்ணாத்தயில் ரஜினியின் சகோதரியாக நடித்த கீர்த்தி சுரேஷை முதலில் கேட்டிருந்தனர். அவர் 3 கோடிகள் சம்பளம் கேட்க, இப்போது சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அனேகமாக அவர் நடிக்கலாம் என்கின்றன செய்திகள்.

    வேதாளம் படம் 2018 இல் வங்க மொழியில் சுல்தான் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. விரைவில் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: