பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ’வர்மா’ டீசர் - வீடியோ

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ’வர்மா’ டீசர் - வீடியோ
வர்மா பட போஸ்டர்
  • News18
  • Last Updated: September 23, 2018, 5:11 PM IST
  • Share this:
நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்திருக்கும் வர்மா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் வர்மா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்கியுள்ளார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகிறார்.

இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். ரீமேக் என்றாலும் தமிழில்  சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்தப் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படத்திண்டீசரை துருவ்வின் பிறந்த நாளான இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

First published: September 23, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...