• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தலையா... தளபதியா? மோஸ்ட் ஃபேவரைட் ஹீரோவை கூறிய விக்ரம் மகன் துருவ்!

தலையா... தளபதியா? மோஸ்ட் ஃபேவரைட் ஹீரோவை கூறிய விக்ரம் மகன் துருவ்!

விக்ரம் மற்றும் அவரது மகன்

விக்ரம் மற்றும் அவரது மகன்

துருவ் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்ட போது அவரிடம் மாணவர் ஒருவர் உங்களுக்கு தல பிடிக்குமா இல்ல தளபதி பிடிக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தனக்கு பிடித்த நடிகர் அஜித்தா அல்லது விஜயா என்று நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

    திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவருடைய மகன் துருவ் விக்ரம் தெலுங்கில் வெளியாகி வெற்றிப்பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.

    முதலில் வர்மா என்ற டைட்டிலில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் நடித்தார் துருவ். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    Also read... நான் தான் பிக்பாஸ் 3 போட்டியின் வெற்றியாளர்... சேரன் சொல்லும் முக்கிய காரணம்!

    தற்போது அதேபடம் ஆதித்ய வர்மா என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை அர்ஜூன்ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரி சய்யா இயக்கியுள்ளார்.

    இந்த படம் நவம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், துருவ் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்ட போது அவரிடம் மாணவர் ஒருவர் உங்களுக்கு தல பிடிக்குமா இல்ல தளபதி பிடிக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த துருவ் விக்ரம் உண்மைய சொல்லனுமா எனக்கு தளபதி தான் பிடிக்கும் என்று தெரிவித்தார். இதனை கேட்ட தளபதி ரசிகர்கள் அவர் பேசிய வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: